அம்மா!
ஈரைந்து மாதங்கள் உன் கருப்பையில்
இருபத்தைந்து வருடங்கள் உன் கைப்பிடியில்
இந்த வருடம் இத்துபாயில்!
என்ன பாடு படும் உன்மனம் என்னைப்போல்!..
மென்மையான அன்பினால்
மேன்மையானாய் நீ!
தாய்மை எனும் சொல்லினால்
தூய்மையானாய் நீ!
நான் பேசிய அம்மா எனும் முதல் வார்த்தை
அவள் காதில் தேனைப்போல!
ஆனால் அவளோ நமக்கு வானைப்போல...!