Monday, April 19, 2010
ஜனநாயகம்!!
நாசமா போனாலும்
நாம நல்லா இருந்தா
போதுமுன்னு நாட்டை
ஆளும் பல நாயகர்(ய்)கள்
நடத்தும் நாடகமே
ஜனநாயகம்!!
Wednesday, April 7, 2010
சக்கரைப் பொங்கல் சத்தியம்!!
மடியில தூக்கி வச்சான்
மருமக இவதான்னு மகிழ்ச்சியோட
மாருதட்டிக் கொண்டாடினான்...
வருஷம் பதினைந்தில்
வாண்டு வளர்ந்து
வாழைக்குமரியாச்சு...
சத்தியம் செஞ்ச மாமன்
சந்ததிய பெருக்க வருவான்னு
கூடப்பொறந்தவ கொண்டாடினா..
கால மாறிப்போச்சு
வாழ்வும் மாறிப்போச்சு
பேச்சும் மாறிப்போச்சு..
செஞ்ச சத்தியமும்
சக்கரைப் பொங்கலாகிப்போச்சு.....
Tuesday, March 30, 2010
விளையாட்டாய் ஒரு வேலை!
அரட்டை அடித்து கொண்டிருந்த நேரம்!
வந்தது ஒருகூட்டம் போட்டது பலபிட்டை
தந்தது ஒருபேப்பரை எழுதச்சொன்னது அவரவர்
பேரை ஊரை ஃபோன் நம்பரை!
கழிந்தது சிலதினம் ஒலித்தது செல்மணி
எதிரொலித்ததது ஒருகுரல் பெயருடன்
தன் நோக்கத்தையும் அதே பிட்டுடன்!
எதிர்பாராமல் பிடித்தேன் அக்குரலை
கதைத்தது என் இளநிலைக்கல்லூரித் தோழி!
உடனே அழைத்தால் அவள் அலுவலகம்
சென்றேனங்கே.. கிடத்தது ஒரு வாய்ப்பு
எனக்கு மிகவும் பிடித்த என் முதல் வேலை!
அறக்கபறக்க ஓட வேண்டும் கல்லூரி முடிந்ததுமே!
யாரேனும் உடன்வர வேண்டும் அவ்வளவு தூரம்!
திரும்பி வர வேண்டும் இரவு நேரம்!
யோசிக்கவில்லை அதன் பாரம்!..
சிறிய பட்டாளம்முதல்
பெரிய பட்டாளம்வரை
நடத்த வேண்டும் பல பாடம்
கற்றேன் நானும் பல பாடம்!
என் சந்தோஷத்தின் தொடக்கம் அங்கே
அவர்களின் மேடமென்ற வார்த்தையில்!
ஆயிரம் ரூபாயில் ஆரம்பித்த சம்பளம்
அளித்ததெனக்கு மிகப்பெரிய மனபலம்
அதோடு நிற்கக்கூடாதென்ற தைரியகுணம்!
படிப்பிலிருந்து பாடம்வரை!!
அப்பாவ இழந்த பின்னே
அக்காக்களும் அண்ணன்களும்
அம்மாவுக்கு இருந்தும்
ஆதரவுக்கரம் நீட்ட ஆருமில்லை..
படிப்புக்கு ஆசைப்பட்டு தவித்தேன்
படித்தே ஆகனும்னு அடம்பிடித்தேன்
திண்டாடித்தான் போனாள் என் அம்மா..
அக்கறைக்கு குறைவில்லை
அவசரமாய் நடக்கப்பதற்கு
அப்படியோர் வழியுமில்லை..
ஆண்டவனின் ஆசியினால்
அள்ளித்தந்தான் ஒரு வாய்ப்பை..
ஆன்றோரின் கருணையினால்
ஆறு வருஷம் போயே போச்சு..
படிச்சு முடிச்சு சேர்ந்தாச்சு வேலைல
சேர்க்கப்பட்டேன் அதே கல்லூரியில்
எதையுமே ஆராய முடியாமல்...
அன்பான நண்பர்களின் தூண்டுதலில்
அவசரமாய் நானும்தான் போனேனே
அடக்கமாய் அவர்களிடம் கேட்டெனே
போதாத சம்பளத்த உயர்த்ததான்..
எங்களால படிச்சுப்புட்டு
எங்களுக்கு சேவை செய்ய
மனமில்லை உனக்கென...
தீ போல வார்த்தைல சுட்டதனால்
சட்டென வந்தேனே திரும்பித்தான்..
வாங்கிக் கட்டிய வார்த்தையின்
ரணமின்னும் நீங்கவில்லை..
வந்துவிட்டேன் கடல் கடந்து..
வாங்குகிறேன் கைநிறைய
போதுமென்ற திருப்தியுடன்..
மறுபடியும் அதே அன்பான தோழி
அழைக்கிறாள் தொலைபேசியில்
ஆரோக்கியம் அனைத்தும் விசாரித்து
ஆக்ரோஷமாய் சொல்கிறாள்
அந்த ஆன்றோருக்கு
அளிக்க வேண்டும் அதே
வார்த்தை தீயை வாவென..
ஆச்சர்மாய் அமைதியாய்
அடங்கித்தான் போன்னேன்
அவள் முன்னாள்...
அனைத்தும் இருக்கிறது அவளிடம்
ஆனாலும் எனக்கென பேசிய
அவ்வார்த்தை இதயத்திற்கு
இதமளித்தது அந்நேரம்!!
ஆன்றோர் எனக்கு அளித்த கல்வியை
மறக்காமல் அனைத்தையும் மறந்தேன்..
ஆண்டவனை மட்டும் மனதில்கொண்டு..
Tuesday, March 23, 2010
தவறு!
விவரமேதும் தெரியாம
வேடிக்கயாய் செய்துவிட்ட
வீரியமில்லா காரியமெண்ணி
வெடவெடத்துப் போனேனே..
வில்லங்கம் வருமென்ற
விவகாரத்த நெனச்சுத்தான்...
விக்கி விக்கி நின்னாலும்
விம்மி விம்மி அழுதாலும்
வீரம் மட்டும் குறையாது
வேஷமிடத் தெரியாது..
வந்தாரெல்லாம் வலிகொடுக்க
வாய்ச்சாரே ஒருத்தர் மட்டும்
வாயார மனதார
வாசகம்தான் சொன்னாரே....
பழி சொல்லும் ஊருக்கு
வழி சொல்லத் தெரியாது...
பெண்ணே நீ புறப்படு
பொன்னான காலம் தேடி........
விண்ணைத்தான் தொடுவாயே
விண்மீன்தான் பறிப்பாயே........
நன்றிதனை நானுறைப்பேன்
Monday, March 8, 2010
சில்லுனு ஒரு மழைக்குப்பின்!
வானமும் பூமியும்
அடித்துக்கொண்டு
அடங்கி ஒடுங்கி
சமாதானமான அந்நேரம்..
அருகே அழைத்தாய்
வந்தேன் நான்
அமைதியாய் ஆசையாய்..
கேளாமல் நீ எதிர்பார்த்த
ஒற்றைக் காப்பியுடன்..
மழை ஒன்றும் புதிதல்ல
வரும்போதெல்லாம்
புதிய விருந்தாளியாகிறது
மனதிற்கு விருந்துமளிக்கிறது..
அன்றேனோ அப்படியொரு குளிர்..
மனசு மயங்கும் மாலைநேரம்!
வீசும் லேசான ஈரக்காற்று
இதமாய் எனைத்தள்ளி
அள்ளிக்கொண்டு போகாமல்
தாங்கி அனைப்பாயா?
ஏங்கினான் அவன்..
உனக்குள்ளும் அதே
எண்ணமா? கண்டேன்
அவன் கண்களில்!
இதமான உன்சூட்டை
எனக்களிக்க முந்தினாய்!
அன்று காபியின் சுவைகூட
கூடித்தான் போனது......!!
Wednesday, February 24, 2010
எனக்கு புடிச்சது
Notes: அவரோட தற்புகழ்ச்சியுமிருக்கும்.. அதான் ஸ்பெஷல் இதுல..)
சரி ஆரம்பிப்போம்......
இன்னும் துவைக்கப்பட்டாமலே இருக்கிறது
சென்ற மாதம் துவைக்கையில்
கிழிந்து போன சொக்காய்.
மொக்கை மன்னர்களின் கவிகள்!
நன்றி: தணி மற்றும் சுபைரு!
முதல்ல தணி:
வெக்கைகளை மட்டுமே
வீசியழும் அலுவலக கதிர்களுக்கு
நடுவே மொக்கைகளாய்
நீ வீசிடும் தென்றலில் தான்
மனம் லயித்துக்கிடக்கிறது!
எக்காரணம் கொண்டும்
எவன் வந்து சொன்னாலும்
மொக்கைகளை நிறுத்தி
பொக்கைவாய் சிரிப்பாய்
ஆக்கிவிடாதே!
இப்ப சுபைரு:
வாழ்வின் கோலத்தில்
கலைந்து கிடக்கும் தலையை
சீவி சீர் செய்ய வந்தவன்
இந்த பரட்டை..!
மொக்கைகளின் நாயகன்...!
மொக்கையாய் இருப்பதே
சிறப்பென்பவன்..!
(மச்சி முடியலடா...கொஞ்சம் ஓவரா போகுது)
மறுபடியும் தணி:
என்னால முடியுதே...
நீ எவ்ளோ அழகா சொல்லுற மச்சி ..சான்சே இல்ல
இப்ப பாரேன்...
சீர் செய்ய வந்தவனென்றெனை
தேர் செய்து ஏற்றி நீ மகிழ்ந்தாய்!
மொக்கைக்கோர் நாயகனென்றெனை
பக்காவாய் அழைத்தாய்!
சக்கைகளுக்கு நடுவில்
நான் சாறாய் இனிக்கிறேனென்றனை
உன் நாவால் பாடி நன்றியுரைத்தாய்!
நண்பனே -உன்
அன்பால் நான் மனம் மகிழ்ந்தேன்
அகம் குளிர்ந்தேன்!
நன்றிக்கு நன்றியென்று சொல்லி
உனை தூரமாய் நிறுத்திவிட தோன்றவில்லையெனக்கு!
நன்றிக்கும் வாழ்த்துக்கும்
நன்றியென்று சொல்லிவிட்டு
உனை அருகிலிருத்தி பார்க்கவும் தோன்றவில்லையெனக்கு!
மொத்தத்தில் பறக்கிறேன்!
யுத்தத்தில் நிற்கிறேன்!
ஆம்
நட்பின் உணர்வுகள் மோதிக்கொள்ளும்
அழகிய யுத்தம் இது!
கைகோர்த்தலும் குலுக்கலும் மட்டும் தான்
கை கலப்பு என்பதில்லா யுத்தமடா தோழா!
Sunday, February 21, 2010
!கருத்துக்கவிதை!
சூடான வெய்யிலில்
சுட்ட நீர் வந்தாலும்
அதை அடைந்தே தீருவேனென
கொஞ்சும் இந்த குஞ்சுக்குருவியின்
தன் கைய்யே தனக்குதவி
முயற்சி திருவினையாக்கும்
போன்ற நல்ல கருத்துக்களை
மறவாமல் மனதில் கொள்வோம்!
கருத்துக்கவிதை!
!சூழ்நிலைக்கவிதை!
கடகடவென காப்பிகூட
குடிக்காமல் காலையில்
சாலையை கடந்து
வேலைக்கு செல்லும்
வேளையில் குறுக்குவழிப்
பூங்காவில் என்மனம்
நோகும் சில காட்சிகளால்!
பாவாடையும் தாவணியும்
சேலையும சுடிதாரும்
சகிதம் உலாவிய நம்மூர்
அழகுப்பெண்கள்
ஏனோ இங்கிப்படி
நாகரீக மோகமாக
முட்டிக்கால் ஜீன்ஸும்
ஸ்லீவ் லெஸ்ஸுமாக
ஆண்களும் நடந்து
ஆர்ப்பரிக்கும் காலையில்
வாக்கிங் ஜாக்கிங் என்று
தன்னையே காண்பித்து
எதற்கிந்த அறங்கேற்றம்?!
இவர்கள் ஏன் இப்படி?!
காலை முதல் மாலை வரை
கண்கள் பல காண்கிறேன்..
எங்கெல்லாமோ பார்க்கின்றன..
பல நேரங்ககளில் ஏனோ
பார்க்கின்றன என
எண்ணம் எனக்குள்..
காண்பவை அனைத்தும்
வக்கிரமாகவே கண்கூடாக...
அப்படி ஒன்றுமில்லை
கண்கவர்ச்சிக்கு...
உணரவேண்டுமவர்கள்..
அவர்களொன்றும் காட்சிப்
பொருளல்லவென...
இவர்கள் ஏன் இப்படி?!
பாண்பாடு மறந்து
பார்க்கும் இடமெல்லாம்
கையும் இடையும்
கோர்த்துக் கதைத்துத்
திரியும் ஜோடிகள்
காதலர்கள் இல்லையாம்..
கணவன் மணைவியாம்....
இவர்கள் ஏன் இப்படி?!
Thursday, February 18, 2010
முத்தம்மா...
விடிந்தது ஒரு அழகான ரம்மியமான காலைப்பொழுது. கிராமமே வேலையும் வெட்டியுமா பறந்துட்டுருக்க, பெரிய வீட்டுக்கரம்மா அன்னக்கிளி, அடியே கண்ணு செல்லம் முத்தம்மா எந்திரிடியம்மானு ஆசையான குரலுடன் முத்தம்மாவின் அருகே வந்தாள். அசையவில்லை அவள் தேகம்...
முத்தம்மா, அவ பாட்டி பேரு...பேருக்கு ஏத்த மாதிரி மூக்குமுழியுமா, முத்து முத்தா படப்படவென பொரிந்து பேசக்கூடிய பாங்கான பெண். பார்ப்பவர்கள் பேசத்துடிக்கும் பேரழகி. தங்கம், அன்னக்கிளி தம்பதியின் ஆசைக்கும் அருமைக்கும் ஒரே மகள். பெரிய வீட்டுக்கர பொண்ணு. அதனால எல்லாரும் பாசமா மரியாதையா மட்டும் பேசுவாங்க. தோழினு சொல்லிக்கொள்ள அவளுக்கு சாந்தானு ஒருத்தி மட்டும்தான்.... எப்பவாச்சும் அவளத்தேடி வருவா.....
முதலாளி. அந்த கிராமத்தில பெரிய வீட்டுக்காரவரு. எந்த நல்லதுக்கும் கெட்டதுக்கும் அவர் இல்லாம ஒரு அணுவும் அசையாது. உதவினு யாரு வந்தாலும் அள்ளிக்கொடுப்பதில் வல்லவர். அன்னக்கிளியும் அசரமாட்டாள், அடுத்தவர்களுக்கு உதவுவதில் தங்ககத்தையும் மிஞ்சுவாள். கொடுப்பதால்தான் என்னவோ அவர்களின் சொத்தும் சுகமும் கொஞ்சமும் குறைவதில்லை. இரண்டு நாள் விடுமுறைக்குப்பின் பள்ளிக்கு செல்ல அடம்பிடிக்கும் குழந்தைதான் இந்த 16 வயது முத்தம்மா.. 12வது படிக்கும் கெட்டிக்காரி.. காலையில் மேகம் மெல்ல மெல்ல விலக சூரியன் எட்டிப்பார்ப்பது போல அழகான விழிகளை திறந்தது அந்த ரோஜாப்பூ.. அருகே அன்னக்கிளி .. ஆசையாய் ஒரு முத்தமும் கிடைத்தது அவளுக்கு..
அந்த சின்னப்பூ சோம்பலை முறித்து எழுந்தது... என்னதான் வீட்டில் அன்பும் பாசமும் பணமும் அளவுக்கதிகமாக இருந்தாலும் அனைத்தும் அருகே வரவேண்டுமென்ற மகாராணி கட்டளைகள் இடுவதில்லை எப்போதும்.. பள்ளி செல்ல ஆயத்த வேலைகளிம் மும்முறமானாள்.. சிரிது நேரத்தில் அவளது அறையிலிருந்து அலறல் சத்தம்.. அம்மாஆஆஆ இங்க வாயேன்ன்ன்ன்ன்னு.. மகளுக்கு ஏதோ ஆச்சுனு பயத்தில அலரியடித்து சமையலறையிலிருந்து ஓடி வந்தாள் அன்னக்கிளி.. என்னாச்சுடி கண்ணுனு...
வந்தவளுக்கோ ஒன்னும் புரியல.. முத்தம்மா எதோ தேடிக்கொண்டிருந்தாள்..என்ன தேடுறேமா? சொல்லு அம்மாவும் தேடுறேன்னு கேட்டாள். என்னோட ப்ளூ ஸ்கேர்ட்ட காணலமானு அமைதியான பதில்.. ! ஆமா அந்த ப்ளூ ஸ்கேர்ட்தான் அவளோட ஸ்கூல் யூனிஃபார்ம்.. அடி அசடு, அந்த அலமாரில நாந்தான் இஸ்திரி போட்டு வச்சுருக்கேன்டி.. ரெண்டுநாள் லீவுல பாவாடை தாவாணிலாம் மறந்து போயிடுமே என் செல்லத்துக்கு.. ஆமா கிராமமா இருந்தாலும் பெரிய வீட்டு பொண்ணு பாவாடை தாவணிலாம் லீவு நாள்ல நினைக்கிறதில்லை..
கஷ்டப்பட்டுதான் இந்த பொன்னு அந்த பள்ளிக்கூடத்துல பாவாடை தாவணி கட்டாயம்னு சொல்லியும் படிக்கிறா.. ஆமா தங்கத்துக்கும் அன்னக்கிளிக்கும் மகள பிரிய மனசில்லாமதான் வெளியூர் அனுப்பாம அந்த கிராமத்துலயே படிக்க வைக்கிராங்க.. பாவாடை தாவணில அந்த தேவதைய காண கோடிகண் வேணும்.. அவ்வளவு அழகு!.. அப்பா எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் நாங்க எங்க கடமையை செய்வோம்னு சொல்லிக்கிட்டு, அழகு தேவதையைப் பெற்றவர்னு இளசுப்பசங்க இவரைப் புகழாத நாளே இல்லை..
பள்ள
ியும் வீடும்தான் அந்த கிராமத்தில் அவளுக்குத் தெரிந்த இடங்கள்.. ஆத்தங்கரை, கொளத்தாங்கரை பக்கமெல்லாம் காத்து வாங்ககூட போனது இல்லே.. பாண்டியாட்டம், பல்லாங்குழி எல்லாமே பெரிய வீட்டுக்குள்ள அன்னக்கிளிக்கூடதான்..இப்டியே போனது அந்த வருடமும்.. 12வது பாஸும் ஆச்சு அந்த அழகுப்பெண்... ரெட்ட ஜடை வயசும் முடிஞ்சு போச்சு........
(முற்றும்)
