Monday, March 28, 2011

♫ தனிமை...

வேண்டாமென்று வெறுத்து
ஒதுக்குகுகிறேன் உன்னை..
விடாமல் ஒட்டிக்கொள்(ல்)கிறாய்...
பெயரில் மட்டும்தான் நீ தனிமை
எப்பொழுதும் ஒருவருடன்
இணைந்து கொள்(ல்)கிறாய்...

விருப்பு வெறுப்பு
கோபம், சந்தோஷம்
எதுவாயினும் உன்னிடமே
காட்டி விடுகிறேன்..
பொறுத்துக்கொள்
என் தனிமையே!!

பலநேரம் உன்னுடனே
உறவாடி உறைந்து
உறங்கிப் போகிறேன்..
என் சிந்தனையின்
சினுங்கல்களும்
சிக்கிவிடுகிறது உன்னில்...