Notes: அவரோட தற்புகழ்ச்சியுமிருக்கும்.. அதான் ஸ்பெஷல் இதுல..)
சரி ஆரம்பிப்போம்......
இன்னும் துவைக்கப்பட்டாமலே இருக்கிறது
சென்ற மாதம் துவைக்கையில்
கிழிந்து போன சொக்காய்.
சென்ற மாதம் துவைக்கையில்
கிழிந்து போன சொக்காய்.
மொக்கைகளின் நாயகன்...!
நீ எவ்ளோ அழகா சொல்லுற மச்சி ..சான்சே இல்ல
இப்ப பாரேன்...
சீர் செய்ய வந்தவனென்றெனை
தேர் செய்து ஏற்றி நீ மகிழ்ந்தாய்!
மொக்கைக்கோர் நாயகனென்றெனை
பக்காவாய் அழைத்தாய்!
சக்கைகளுக்கு நடுவில்
நான் சாறாய் இனிக்கிறேனென்றனை
உன் நாவால் பாடி நன்றியுரைத்தாய்!
நண்பனே -உன்
அன்பால் நான் மனம் மகிழ்ந்தேன்
அகம் குளிர்ந்தேன்!
நன்றிக்கு நன்றியென்று சொல்லி
உனை தூரமாய் நிறுத்திவிட தோன்றவில்லையெனக்கு!
நன்றிக்கும் வாழ்த்துக்கும்
நன்றியென்று சொல்லிவிட்டு
உனை அருகிலிருத்தி பார்க்கவும் தோன்றவில்லையெனக்கு!
மொத்தத்தில் பறக்கிறேன்!
யுத்தத்தில் நிற்கிறேன்!
ஆம்
நட்பின் உணர்வுகள் மோதிக்கொள்ளும்
அழகிய யுத்தம் இது!
முதலாளி. அந்த கிராமத்தில பெரிய வீட்டுக்காரவரு. எந்த நல்லதுக்கும் கெட்டதுக்கும் அவர் இல்லாம ஒரு அணுவும் அசையாது. உதவினு யாரு வந்தாலும் அள்ளிக்கொடுப்பதில் வல்லவர். அன்னக்கிளியும் அசரமாட்டாள், அடுத்தவர்களுக்கு உதவுவதில் தங்ககத்தையும் மிஞ்சுவாள். கொடுப்பதால்தான் என்னவோ அவர்களின் சொத்தும் சுகமும் கொஞ்சமும் குறைவதில்லை.
அந்த சின்னப்பூ சோம்பலை முறித்து எழுந்தது... என்னதான் வீட்டில் அன்பும் பாசமும் பணமும் அளவுக்கதிகமாக இருந்தாலும் அனைத்தும் அருகே வரவேண்டுமென்ற மகாராணி கட்டளைகள் இடுவதில்லை எப்போதும்.. பள்ளி செல்ல ஆயத்த வேலைகளிம் மும்முறமானாள்.. சிரிது நேரத்தில் அவளது அறையிலிருந்து அலறல் சத்தம்.. அம்மாஆஆஆ இங்க வாயேன்ன்ன்ன்ன்னு.. மகளுக்கு ஏதோ ஆச்சுனு பயத்தில அலரியடித்து சமையலறையிலிருந்து ஓடி வந்தாள் அன்னக்கிளி.. என்னாச்சுடி கண்ணுனு...
வந்தவளுக்கோ ஒன்னும் புரியல.. முத்தம்மா எதோ தேடிக்கொண்டிருந்தாள்..என்ன தேடுறேமா? சொல்லு அம்மாவும் தேடுறேன்னு கேட்டாள். என்னோட ப்ளூ ஸ்கேர்ட்ட காணலமானு அமைதியான பதில்.. ! ஆமா அந்த ப்ளூ ஸ்கேர்ட்தான் அவளோட ஸ்கூல் யூனிஃபார்ம்.. அடி அசடு, அந்த அலமாரில நாந்தான் இஸ்திரி போட்டு வச்சுருக்கேன்டி.. ரெண்டுநாள் லீவுல பாவாடை தாவாணிலாம் மறந்து போயிடுமே என் செல்லத்துக்கு.. ஆமா கிராமமா இருந்தாலும் பெரிய வீட்டு பொண்ணு பாவாடை தாவணிலாம் லீவு நாள்ல நினைக்கிறதில்லை..
கஷ்டப்பட்டுதான் இந்த பொன்னு அந்த பள்ளிக்கூடத்துல பாவாடை தாவணி கட்டாயம்னு சொல்லியும் படிக்கிறா.. ஆமா தங்கத்துக்கும் அன்னக்கிளிக்கும் மகள பிரிய மனசில்லாமதான் வெளியூர் அனுப்பாம அந்த கிராமத்துலயே படிக்க வைக்கிராங்க.. பாவாடை தாவணில அந்த தேவதைய காண கோடிகண் வேணும்.. அவ்வளவு அழகு!.. அப்பா எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் நாங்க எங்க கடமையை செய்வோம்னு சொல்லிக்கிட்டு, அழகு தேவதையைப் பெற்றவர்னு இளசுப்பசங்க இவரைப் புகழாத நாளே இல்லை..
பள்ள
ியும் வீடும்தான் அந்த கிராமத்தில் அவளுக்குத் தெரிந்த இடங்கள்.. ஆத்தங்கரை, கொளத்தாங்கரை பக்கமெல்லாம் காத்து வாங்ககூட போனது இல்லே.. பாண்டியாட்டம், பல்லாங்குழி எல்லாமே பெரிய வீட்டுக்குள்ள அன்னக்கிளிக்கூடதான்..இப்டியே போனது அந்த வருடமும்.. 12வது பாஸும் ஆச்சு அந்த அழகுப்பெண்... ரெட்ட ஜடை வயசும் முடிஞ்சு போச்சு........