Tuesday, March 23, 2010

தவறு!

வெட்டுக்கிளி நானும்தான்

விவரமேதும் தெரியாம

வேடிக்கயாய் செய்துவிட்ட

வீரியமில்லா காரியமெண்ணி

வெடவெடத்துப் போனேனே..

வில்லங்கம் வருமென்ற

விவகாரத்த நெனச்சுத்தான்...

விக்கி விக்கி நின்னாலும்

விம்மி விம்மி அழுதாலும்

வீரம் மட்டும் குறையாது

வேஷமிடத் தெரியாது..

வந்தாரெல்லாம் வலிகொடுக்க

வாய்ச்சாரே ஒருத்தர் மட்டும்

வாயார மனதார

வாசகம்தான் சொன்னாரே....

பழி சொல்லும் ஊருக்கு

வழி சொல்லத் தெரியாது...

பெண்ணே நீ புறப்படு

பொன்னான காலம் தேடி........

விண்ணைத்தான் தொடுவாயே

விண்மீன்தான் பறிப்பாயே........

நன்றிதனை நானுறைப்பேன்

நாட்கள்தான் நகர்ந்தாலும்!

No comments:

Post a Comment