கல்லூரி வகுப்பறையில் நட்பில் மூழ்கி
அரட்டை அடித்து கொண்டிருந்த நேரம்!
வந்தது ஒருகூட்டம் போட்டது பலபிட்டை
தந்தது ஒருபேப்பரை எழுதச்சொன்னது அவரவர்
பேரை ஊரை ஃபோன் நம்பரை!
கழிந்தது சிலதினம் ஒலித்தது செல்மணி
எதிரொலித்ததது ஒருகுரல் பெயருடன்
தன் நோக்கத்தையும் அதே பிட்டுடன்!
எதிர்பாராமல் பிடித்தேன் அக்குரலை
கதைத்தது என் இளநிலைக்கல்லூரித் தோழி!
உடனே அழைத்தால் அவள் அலுவலகம்
சென்றேனங்கே.. கிடத்தது ஒரு வாய்ப்பு
எனக்கு மிகவும் பிடித்த என் முதல் வேலை!
அறக்கபறக்க ஓட வேண்டும் கல்லூரி முடிந்ததுமே!
யாரேனும் உடன்வர வேண்டும் அவ்வளவு தூரம்!
திரும்பி வர வேண்டும் இரவு நேரம்!
யோசிக்கவில்லை அதன் பாரம்!..
சிறிய பட்டாளம்முதல்
பெரிய பட்டாளம்வரை
நடத்த வேண்டும் பல பாடம்
கற்றேன் நானும் பல பாடம்!
என் சந்தோஷத்தின் தொடக்கம் அங்கே
அவர்களின் மேடமென்ற வார்த்தையில்!
ஆயிரம் ரூபாயில் ஆரம்பித்த சம்பளம்
அளித்ததெனக்கு மிகப்பெரிய மனபலம்
அதோடு நிற்கக்கூடாதென்ற தைரியகுணம்!
No comments:
Post a Comment