நன்றி: தணி மற்றும் சுபைரு!
முதல்ல தணி:
வெக்கைகளை மட்டுமே
வீசியழும் அலுவலக கதிர்களுக்கு
நடுவே மொக்கைகளாய்
நீ வீசிடும் தென்றலில் தான்
மனம் லயித்துக்கிடக்கிறது!
எக்காரணம் கொண்டும்
எவன் வந்து சொன்னாலும்
மொக்கைகளை நிறுத்தி
பொக்கைவாய் சிரிப்பாய்
ஆக்கிவிடாதே!
இப்ப சுபைரு:
வாழ்வின் கோலத்தில்
கலைந்து கிடக்கும் தலையை
சீவி சீர் செய்ய வந்தவன்
இந்த பரட்டை..!
மொக்கைகளின் நாயகன்...!
மொக்கையாய் இருப்பதே
சிறப்பென்பவன்..!
(மச்சி முடியலடா...கொஞ்சம் ஓவரா போகுது)
மறுபடியும் தணி:
என்னால முடியுதே...
நீ எவ்ளோ அழகா சொல்லுற மச்சி ..சான்சே இல்ல
இப்ப பாரேன்...
சீர் செய்ய வந்தவனென்றெனை
தேர் செய்து ஏற்றி நீ மகிழ்ந்தாய்!
மொக்கைக்கோர் நாயகனென்றெனை
பக்காவாய் அழைத்தாய்!
சக்கைகளுக்கு நடுவில்
நான் சாறாய் இனிக்கிறேனென்றனை
உன் நாவால் பாடி நன்றியுரைத்தாய்!
நண்பனே -உன்
அன்பால் நான் மனம் மகிழ்ந்தேன்
அகம் குளிர்ந்தேன்!
நன்றிக்கு நன்றியென்று சொல்லி
உனை தூரமாய் நிறுத்திவிட தோன்றவில்லையெனக்கு!
நன்றிக்கும் வாழ்த்துக்கும்
நன்றியென்று சொல்லிவிட்டு
உனை அருகிலிருத்தி பார்க்கவும் தோன்றவில்லையெனக்கு!
மொத்தத்தில் பறக்கிறேன்!
யுத்தத்தில் நிற்கிறேன்!
ஆம்
நட்பின் உணர்வுகள் மோதிக்கொள்ளும்
அழகிய யுத்தம் இது!
கைகோர்த்தலும் குலுக்கலும் மட்டும் தான்
கை கலப்பு என்பதில்லா யுத்தமடா தோழா!
No comments:
Post a Comment