விளக்கு அணைத்திருக்கும்
விடியல்வரை விழித்திருக்கும்
மின்மினி அவள்..
மனதுக்கு வெளிச்சம் தரும்
இனிய கண்மனியும் அவள்!!
புருவமும் கண்களும் மூக்கும் வாயும்
பேச நினைக்கும் பாஷைகளோடு
கலந்துவிட்டாள் என் நெஞ்சோடு..
என்மீது அமர்ந்து அவள்
அழகு புன்னைகை சிந்திவிடுவாள்..
கட்டுப்படா என்
உறக்கத்தின் திறவுகோலது..
கள்ளச்சிரிப்பழகி
கண்ணுறங்கும் வேலையிலே
என் காலையையும் பூட்டிவிட்டது
இன்பமான நினைவாலே!!

No comments:
Post a Comment