Tuesday, April 2, 2013

ஞாபகம்!!



நீயும் நானும் ஓடி
விளையாடி ஊஞ்சளாடிய
பழையகதை பேசிப்பேசியே
பொழுதைக்கழிக்கின்றது
நம் வீட்டு தோட்டத்து
புளியமரமும்
கட்டிக்கொண்ட
ஊஞ்சலும்!!

உன் நினைவுகள்
கடற்கரையின்
கால்சுவடுகளல்ல..
என் மனக்கடலின்
காலச்சுவடுகள்...

எப்போதும் உன் வாசம்
காற்றில்
மெல்ல வீசி வருகிறது..
எப்போது
நாம் குடிபெயர்வது
நம்முள்ளே....

No comments:

Post a Comment