Tuesday, April 2, 2013

பின்னால போகும் வண்டி..

Inline image 1

வீட்டுக்குள்ள ஒரு வண்டி
பின்னாலதான் போகுது
எல்லாரையும்  தாண்டி..

ஆளக்கண்டா முறைக்குது
சிரிக்குது மயக்குது...
மயங்குறேன்..

மூக்குபோயி முன்னால
முட்டுது முணங்குது ..
கொஞ்சினால் குழாவுது..

பிஞ்சுக்கையில அகப்பட்ட
முகத்தை வாரியெடுத்து
வாய்குள்ள வைக்கயில
ஊத்துற வானியில வந்த வாசத்துல
பறக்குற மனச அள்ளிக்கிட்டு...
மறுபடியும் பின்னாலதான் போகுது
இந்த அதிசய வண்டி!!



No comments:

Post a Comment