உன் நினைவலைகளை
கனவெல்லாம் கடன்கேட்கும்!
பள்ளி செல்லும்
காலை வேலையில்
ஊரே சொல்லும்
நம்காதல் ஓலையை!
முன்னே நீ பின்னே நான்
கண்ணால் நாம் பார்த்ததில்லை!
நம் நேசத்தை பாசத்தை
வேசமென மோசமாக
எவரும் பேசியதில்லை!
உன் மூச்சுக்காற்றின்
நேசம் தாங்கி
பார்வை ஊற்றின்
சுவாசம் ஏங்கி நின்றேன்
தவிக்கும் என் மனதின்
ஓட்டம் அறிந்து
என்னுள் நுழைந்து
உன் காதலை பதிந்தாய்!
அருகினில் அமரவில்லை
அஞ்சி நடுங்கவில்லை
கொஞ்சிப் பேசவில்லை
நெஞ்சில் சாயவில்லை
அமைதியாய் ஜெயித்துவிட்டேன்
கெஞ்சலும் மிஞ்சலும்
அளவில்லாமல் அள்ளிக்கொண்டேன்...
தி(ண்)ணைக் காதல்
எனக்கு அன்னைக்காதல்!
எனதாசைக்கனவை
தினம் உன்று வளர்ந்த
முழுமைக்காதல்!
முதுமையிலும் என்னுள்
உலாவுமிந்த உரிமைக்காதல்!
ஹ்ம்ம் நல்லா இருக்கு சகோதரி
ReplyDelete